ஆன்லைன் ரம்மியால் சோகம்; ரூ.25 இலட்சம் இழந்த வங்கி ஊழியர் தற்கொலை.!



Tenkasi Online Rummy Man Suicide

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வடக்குபத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் மாரிசெல்வம் (வயது 25). இவர் தனியார் வங்கியில் வேலை பார்க்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் ரம்மி மீது அடிமையாக இருந்த மாரிச்செல்வம் ரூ.25 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 

இந்த பணத்தில் ரூ.10 லட்சம் கடனை செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள ரூ.15 லட்சம் கடனை செலுத்த இயலாமல் தவித்துள்ளார். இதனால் மனமுடைந்து போன அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

Tenkasi

இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் மாரிசெல்வத்தை காப்பாற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இருப்பினும் சில மணிநேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.