வீடெல்லாம் மனைவியின் இரத்த வெள்ளத்துடன், அரிவாளோடு கணவன்..! காட்டராஜாவால் சிதறிப்போன குடும்பம்..!Tenkasi Kadayanallur Native Couple Worked at Tiruppur Husband Kills Wife due to She Affair Another one

கள்ளக்காதல் வயப்பட்ட மனைவியுடன் சண்டையிட்ட கணவர், இறுதியில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று மனைவியை கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சிபாளையம், ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் குமார் (வயது 31). இவரின் மனைவி தனலட்சுமி (வயது 25). திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் குமார் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை நேரத்தில் குமார் - தனலட்சுமி தம்பதியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் தனலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதனால், தனலட்சுமியின் தலை மற்றும் கழுத்து என உடலின் பல்வேறு பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்து, பலத்த காயத்துடன் அலறித்துடித்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மிதந்து பலியாகினார். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரின் உடல் அருகே கையில் அரிவாளுடன் குமார் உட்கார்ந்து இருந்துள்ளார். 

Tiruppur

பின்னர், இதுகுறித்து பொதுமக்கள் வேலம்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

விசாரணையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காசிதர்மம் கிராமம், புதுமனை தெருவை சேர்ந்த குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த குமாருக்கும் கடந்த 9 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்து, தம்பதிகளுக்கு சுதன் என்ற 9 வயது மகனும், கவுதம் என்ற 7 வயது மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், தனலட்சுமிக்கு - காட்டுராஜா (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

Tiruppur

இந்த பழக்கமானது இவர்களுக்கிடையே பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் குமாருக்கு தெரியவந்து, மனைவியை கண்டித்தும் கேட்காததால் குடும்ப சண்டை நடந்து வந்துள்ளது. பின்னர், உறவினர்கள் தலையிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தம்பதியை வேலைக்காக திருப்பூர் அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்களின் மகன்கள் இருவரும் கடையநல்லூரில் இருக்கவே, திருப்பூரில் வசித்து வந்த தம்பதிக்கு கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு தொடர்ந்து ஏற்பட்டு வந்துள்ளது. இன்று அதிகாலை நேரத்திலும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த குமார் தனது மனைவியை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.