
கல்லூரி மாணவிக்கு திருமண ஆசை காட்டி உல்லாசம்அனுபவித்து ஏமாற்றிய கில்லாடி: அபராதத்துடன்7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
கல்லூரி மாணவிக்கு திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில், உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதுடைய கல்லூரி மாணவி. இவர் உளுந்தூர் பேட்டையில் உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் கடந்த 2014ஆம் ஆண்டு பிகாம் ஃபஸ்ட் இயர் படித்து வந்தார்.
அப்போது சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான மகேஸ்வரன் என்பவருக்கும் கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட மகேஸ்வரன், அந்த மாணவியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பிறகு அந்த மாணவி மகேஸ்வரனிடம் சென்று தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். கல்யாணம் செய்துகொள்ள மகேஸ்வரன் மறுத்துள்ளார்.
அதனால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சுமத்தப்பட்ட மகேஸ்வரனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட மகேஸ்வரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement
Advertisement