சினிமா

குடித்துவிட்டு வந்து கணவர் செய்த காரியம்! வலி பொறுக்க முடியாமல் டீச்சர் எடுத்த அதிரடி முடிவு! பகீர் சம்பவம்

Summary:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கட

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டியை சேர்ந்த இளமதி என்பவரை காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தஷ்வீந்த் என்ற 10 வயது மகனும், அக்ஷூதா என்ற 6 வயது மகளும் உள்ளனர். இளமதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் மணிகண்டன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, குடிபோதையில் அடிக்கடி வீட்டில் வந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று மாலை குடிபோதையில் வந்த மணிகண்டன் இளமதியை தாக்கி சண்டை போட்டுள்ளார். இதில் வலியை தாங்க முடியாமல், ஆத்திரமடைந்த இளமதி தனது கணவரை உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இளமதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement