மாடிக்கு அழைத்து சென்று மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்.. தர்மஅடி கொடுத்த உறவினர்கள்!Teacher harrasment to school girl in thirupur

திருப்பூர் பிச்சப்பாளையம் புதூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியராக பணிபுரியும் கருப்பசாமி என்பவர், பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை மாடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

harassment

அப்போது அங்கு மாணவியுடன் ஆபாசமாக பேசி, அத்துமீறி முயற்சித்துள்ளார். இதனையடுத்து மாணவி வீட்டிற்கு சென்றதும் இது குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார்.

அப்போது அந்த ஆசிரியர் மாணவியிடம் பள்ளியில் நடந்ததை ஏன் பெற்றோரிடம் கூறுகிறாய் என்று கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் மாணவி பள்ளி வளாகத்தில் நின்று அழுது கொண்டிருந்தார். இது குறித்து தகவறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

harassment

மேலும், மாணவியின் உறவினர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் கருப்பசாமியை தாக்கியுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மாணவி மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கருப்பசாமியை கைது செய்தனர்.