பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் போக்சோவில் கைது!
காஞ்சிபுரம் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக காமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது சைக்கிளை எடுக்க வந்த 11ஆம் வகுப்பு மாணவனுக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்ற பிறகும் மாணவனின் செல்போனுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் காஞ்சிபுரம் காவல்நிலையில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியரை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.