
Tasmac will be closed for 3 days for election
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் துவங்கிவிட்டது. அரசியல் தலைவர்களும் தங்கள் தீவிர பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர்.
அதே சமயம், இந்த தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்திட தேர்தல் ஆணையம் மற்றும் காவல் ஆணையம் பல்வேறு துணிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து விதமான மதுக்கடைகளையும் ஏப்ரல் 16 முதல் 18 வரை, 3 நாட்களுக்கு முழுவதும் அடைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த 3 நாட்கள் மட்டுமின்றி, வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் மார்ச் 23 ஆம் தேதியும் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளார் காவல் ஆணையர். எனவே அனைத்து குடிமகன்களும் இந்த நாட்களில் குடியை மறந்துவிட்டு நாட்டின் உண்மையான குடிமகன்கள் என்பதனை நிரூபிக்க தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement
Advertisement