தமிழகம்

நீட் தேர்வு தோல்வியால் தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை!

Summary:

tamilnadu students suicide for neet exam

நாடு முழுவதும் 156 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் நேற்று மதியம் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில், தேசிய அளவில் 56.50% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்தநிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இரண்டு சக்கர வாகனத்துக்கான ஸ்டாண்ட் நடத்தி வருபவர் நம்புராஜன் என்பவரின் மகள் வைஷியா அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மருத்துவராக வேண்டும் என்கிற கனவில் இவர்  நீட் தேர்வில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் வைஷியா 720 மதிப்பெண்ணுக்கு 230 எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வைஷியா வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த வருடம் மாணவி அனிதாவை தொடர்ந்து அடுத்தடுத்து இதுபோன்று தமிழக மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement