சென்னை, மதுரையில் விரைவில் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு?.. மத்திய அரசு அறிவுறுத்தல்.!

சென்னை, மதுரையில் விரைவில் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு?.. மத்திய அரசு அறிவுறுத்தல்.!



Tamilnadu State Omicron Variant Case 34 Identified Chennai May Face Nighttime Lockdown

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொரோனா வைரஸை விட வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரான் வகை வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. வடமாநிலம் மற்றும் கேரளாவில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. 

தமிழகத்தில் நேற்று வரை ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் இருந்தது. தற்போது, ஒமிக்ரான் 33 பேருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 

Omicron Variant

இந்திய அளவில் ஏற்பட்டுள்ள ஒமிக்ரான் பாதிப்பில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா உறுதியாகி இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மத்திய அரசும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மாவட்டங்கள் அல்லது நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சென்னை மற்றும் மதுரை நகரங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் விரைவில் இரவு நேர ஊரடங்கு அமலாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.