மக்களே உஷார்! தமிழகத்தில் மூடப்படும் பள்ளிகள்; எந்தெந்த பகுதிகளில் எத்தனை தெரியுமா?

மக்களே உஷார்! தமிழகத்தில் மூடப்படும் பள்ளிகள்; எந்தெந்த பகுதிகளில் எத்தனை தெரியுமா?



tamilnadu school education - closed schools

தற்போது தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாத முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் செயல்பட தயாராகி வருகின்றன. தற்போது தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதே பெற்றோர்களின் முதன்மையான பணியாக உள்ளது.

இந்நிலையில், அங்கீகாரம் பெறாமல் செயல்படும் அனைத்து பள்ளிகளும் மூடப்படும்  என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்ற அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என்ற ஆய்வுக்குப் பின்னரே அங்கீகாரம் வழங்கப்படும்.

school education

பள்ளிக்கல்வி ‌இயக்குநரகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில், அனைத்து த‌னியார் பள்ளிகளும் ‌மே 20 முதல் 22க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேதிக்குள் அங்கீகாரத்தை பெற தவறும் 760 பள்ளிகள் இம்மாத இறுதிக்குள் மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத சில பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சிகள் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

மூடப்படும் வாய்ப்புள்ள 760 பள்ளிகளில் அதிகபட்சமாக 86 பள்ளிகள் திருப்பூரில் இயங்கி வருகின்றன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன.