மாலை&இரவு நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!Tamilnadu Private weather Man Update 18 Aug 2022

வளிமண்டல பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

தனியார் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், "காற்று வீசும் திசையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தின் காரணமாக இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை., 

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.