பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த தமிழக மக்கள்! வெறிச்சோடி காணப்படும் தமிழகம்!



tamilnadu people stayed at home

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை படி, நாடு முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவாக இறங்குகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும், அதில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை என கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் திரை அரங்குகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் ரெயில், பஸ், விமான போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை.

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தில் பொதுமக்கள் அனைவரும் இன்று, யாரும் வெளியே வராமல் சுய சுய ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றனர். சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் ஓடவில்லை. கால் டாக்சிகளும் ஓடவில்லை. மக்கள் ஊரடங்கையொட்டி இன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.