AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
இன்று முதல்.... ரயிலில் ஊருக்கு போராவுங்க டிக்கெட் புக் பண்ணுங்க! தமிழகத்தில் அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிப்பு.!
தமிழகத்தில் டிசம்பர் மாதம் தொடக்கம் முதல் பள்ளி விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மக்களின் ஊர் திரும்பும் திட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. இதனை முன்னிட்டு ரயில்வே துறை முன்கூட்டியே மக்களுக்கு சிரமமில்லா பயணம் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அரையாண்டு தேர்வு மற்றும் விடுமுறை அறிவிப்பு
தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவும் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
பெரும் அளவில் மக்கள் ஊர் திரள்வதால் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும் என்பதால், ரயில் துறை இன்று காலை முதல் முன்பதிவு சேவையைத் தொடங்கியதாக அறிவித்துள்ளது. திருவிழா மற்றும் பள்ளி விடுமுறை இரண்டும் ஒரே காலகட்டத்தில் வரும் காரணமாக பயணிகள் திரலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரயில் பயணிகளே தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? வெளியானது டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க....
மக்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணத் திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு ரயில்வே துறை பரிந்துரைக்கிறது. நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி குடும்பத்தாருடன் சொந்த ஊர் செல்லும் எண்ணற்றோர் இதனால் பயனடைவார்கள்.
இதையும் படிங்க: மது பிரியர்களே! தீபாவளி கொண்டாட்டத்தை கொண்டாடுங்க.... டாஸ்மார்க் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!