தமிழகம் இந்தியா Covid-19

கொரோனா பரவலில் தமிழகம் இரண்டாம் இடம்! பலி எண்ணிக்கையில் நான்காம் இடம்!

Summary:

tamilnadu fourth place in corona death

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. 

மகாராஷ்டிராவில் மட்டும் 1,10,744 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா மாநிலமே முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் மகாராஷ்டிராவில் மட்டும் 4,128 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 1,505 பேரும், டெல்லியில் 1,400 பேரும், தமிழகத்தில் 528 பேரும், மேற்குவங்காளத்தில் 485 பேரும் பலியாகி உள்ளனர். 

இந்தியாவிலே, கொரோனா பரவலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 528 ஆக அதிகரித்து நான்காம் இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


Advertisement