ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுகிறதா? தமிழகத்தில் போக்குவரத்து எப்போது இயங்கும்? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் Covid-19

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுகிறதா? தமிழகத்தில் போக்குவரத்து எப்போது இயங்கும்? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம்!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 6,972  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு வீதியை ஆகஸ்ட் இறுதி வரை தொடரும் எனத் தகவல் பரவி வந்தது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்காக பிறப்பிக்கப்ப்ட்ட ஊரடங்கு வரும் வெள்ளிக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிக்க பரிசீலிக்க உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பொது போக்குவரத்து மற்றும் மால்கள் மற்றும் சினிமா அரங்குகள் மீதான தடை நடைமுறை குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo