தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது? முதலமைச்சர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

tamilnadu cm talk about school open


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது.பொதுவாக அனைத்து வருடமும் புதிய கல்வி ஆண்டானது ஜூன் மாதத்தில் துவங்கும். இதற்கான மாணவர்கள் சேர்க்கை இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும். ஆனால் கொரோனாவின் காரணமாக எந்த பள்ளிகளும் திறக்கப்படாததால் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. 

இந்தநிலையில் குழந்தைகளை எப்போது பள்ளியில் சேர்ப்பது, ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் எப்போது பள்ளிக்கு போவார்கள் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் வளர்ச்சி பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதுகாப்பான சூழல் எப்போது வருகிறதோ அப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Advertisement