ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டங்கள் அரசியல் நாடகம்; சேலத்தில் முதல்வர் பரபரப்பு பேச்சு.!

ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டங்கள் அனைத்தும் வெறும் அரசியல் நாடங்கள்தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெவித்துள்ளார்.
பொங்கல் விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊரான சேலத்துக்கு சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், சேலம் அண்ணா பூங்கா அருகே 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தினை திறந்து வைத்தார்.
மேலும், சேலம் ஓமலூர்ச் சாலைக்கு எம்ஜிஆர் சாலை எனவும் பெயர் சூட்டினார். மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு ஊர்களுக்கு சென்று வரக்கூடிய 5 சிற்றுந்துகளின் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அரியானூரில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது : தேர்தல் வர இருப்பதால் தான் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்துகிறார். அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் எத்தனை கிராமங்களுக்கு சென்றார்? ஸ்டாலின் கூட்டங்கள் எல்லாம் அரசியல் நாடங்கள்தான்‘’ என்று தெரிவித்தார்.