பொங்கல் பரிசு தொகை டோக்கன் கையில் இருக்கா? தமிழக அரசின் கடைசி நேர அதிரடி அறிவிப்பு! உடனே இத செய்யுங்க....!



tamil-nadu-pongal-gift-cash-rice-scheme-2026

தைப் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம், குடும்ப அட்டைதாரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டம் மூலம் பண்டிகை காலத்தில் பொருளாதார நிம்மதி கிடைக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் தொடங்கி வைத்த பொங்கல் பரிசுத் திட்டம்

தமிழகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 8) சென்னையில் தொடங்கி வைத்தார்.

ரேஷன் கடைகளில் ஒழுங்கான விநியோகம்

இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஏற்கனவே வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று (ஜனவரி 8) தேதியிட்ட டோக்கன் கொண்ட அனைத்து அட்டைதாரர்களும், திட்டம் தொடங்கியவுடன் தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் சென்று பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகை கொடுப்பதில் புதிய சிக்கல்? ரேஷன் கடைக்கு அதிரடியாக பறந்த உத்தரவு!

ரூ.6,936 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த ரூ.3000 ரொக்க உதவி மற்றும் பொங்கல் பரிசுத் திட்டத்திற்காக மொத்தமாக ரூ.6,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க, ரொக்கப்பணத்தை உறைகளில் (Cover) வழங்காமல் வெளிப்படையாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விநியோக நாட்களில் விடுமுறை இன்றி ரேஷன் கடைகள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை அனைவரும் சமமாக கொண்டாட வேண்டும் என்பதே இந்த தமிழக அரசு பொங்கல் திட்டம் நோக்கம். அரசு மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு தடையில்லா மற்றும் நேர்மையான விநியோகத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களே பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!