தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு! மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து அன்றாட பாதிப்பு நிலவரம் மற்றும் எண்ணிக்கை குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1277 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ,91 ,943 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 70 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சற்று ஆறுதல் தரும் வகையில், இன்று ஒரே நாளில் 5501 பேர் கொரோனா பாத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய தேதியில் 46 ஆயிரத்து 281 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.