அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
35 வயசுல டான்ஸ் ஆடியது பிடிக்கவில்லை: மனைவியை வெட்டி சாய்த்த கணவன் பரபரப்பு வாக்குமூலம்..!
டிக் டாக் கில் நடனமாடிய மனைவியை சந்தேகத்தினால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராமலெட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கல்யாணசுந்தரம் திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கல்யாணசுந்தரம் சொந்தமாக ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். ராமலெட்சுமி அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராமலெட்சுமி அடிக்கடி சந்தேகப்படும்படி போனில் பேசியுள்ளார், மேலும் டிக் டாக் செயலியில் நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இது கல்யாணசுந்தரத்திற்கு பிடிக்காத்தால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் 13-ந்தேதி இந்த பிரச்சினை காரணமாக ராமலெட்சுமி தனது குழந்தைகளுடன் தெற்கு வாகைகுளத்தில் உள்ள தனது தந்தை பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த ராமலெட்சுமியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று மானூர் அழகிய மண்டபம் அருகே பதுங்கி இருந்த கல்யாண சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.