அதிமுக-வுக்கு ஓட்டு கேட்கும் சன் டிவி. ! எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.!

அதிமுக-வுக்கு ஓட்டு கேட்கும் சன் டிவி. ! எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.!


suntv shoe election add

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை சொந்த ஊரில் துவங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல ஊர்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், தேர்தல் பிரச்சார வடிவமாக தமிழக அரசின் சார்பில் "வெற்றி நடை போடும் தமிழகம்" என்ற தலைப்பில் வீடியோ விளம்பரம் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவியில் அதிமுகவின் தேர்தல் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சன் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பாகி வரும் தமிழக அரசின் சாதனை விளம்பரங்கள் குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் தர்மபுரி மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், "சன் டிவி பெரிய வணிகசாம்ராஜ்யமாக இருக்கலாம்.. ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை.. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது  திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.