மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம்... முக்கிய அறிவிப்பு..!!
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பி.எட் பட்டப்படிப்பில் முதல் வருடம் மற்றும் எம்.எட் பட்டப்படிப்பில் முதல் மற்றும் மூன்றாவது வருடத்தில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் 100 நாட்கள் வருகைபுரிய வேண்டும்.
மேலும் பி.எஸ்சி, பி.எட்; பி.ஏ பி.எட் படிக்கும் மாணவர்கள் 125 நாட்கள் வருகைபுரிய வேண்டும். அவ்வாறு கல்லூரிக்கு வருகை தராத மாணவர்களின் பட்டியலை வரும் 6-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தின் tnteuattendance@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அனைத்து மாணவர்களும் 85 விழுக்காடு வருகை புரிய வேண்டும். அவ்வாறு இல்லாமல் 75 விழுக்காடு முதல் 84 விழுக்காடு வரையில், வருகைப்பதிவு உள்ள மாணவர்கள், அதற்கான மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு எழுதலாம் என்று பல்கலைக் கழகத்தில் விதி உள்ளது. மேலும் வருகைப் பதிவு குறைந்ததற்காக அபராதமாக 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.