முடியாது.. முடியாது.... ஆன்லைன் மூலம் பாடம் நடத்திட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்துவீங்களா.? போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை மாணவர்கள்.!

முடியாது.. முடியாது.... ஆன்லைன் மூலம் பாடம் நடத்திட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்துவீங்களா.? போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை மாணவர்கள்.!



Students protest for exam

தேர்வுகளை ஆன்லைன் மூலம்  நடத்தக் கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்தநிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாணவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் மன்னர் கல்லூரி மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக மட்டுமே நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், ‘நேரில் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில்தான் தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நேரடி தேர்வுகளை, அதாவது ஆஃப்லைன் தேர்வுகளை ரத்து செய்து ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகக் கல்லூரிக்கு மனுகொடுத்தும் ஏற்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.