17 வயது சிறுமி வீடுபுகுந்து கொலை.. திருப்பூரில் பரபரப்பு சம்பவம்.. கதறித்துடித்த பெற்றோர்..!



student-murdered-in-his-house

11–ஆம் வகுப்பு மாணவி சமயலறையில் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில், காந்தி சதுக்கம் பத்திரகாளியம்மன் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சண்முகராஜ். இவரின் மனைவி கற்பகவல்லி. இந்த தம்பதியின் ஒரே மகளான ஹர்திகா, பொள்ளாச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், ஹர்திகா வீட்டின் சமையலறையில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் உடனடியாக ஹர்திகாவை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் ஹர்த்திகா மருத்துவமனைக்கமற்றும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் சிறுமியின் மரணம் குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரணை செய்தனர். அப்பொழுது சிறுமி வீட்டில் தனியாக உள்ளதை அறிந்து அங்க வந்து மர்ம நபர்கள், கழுத்தை அறுத்து கொன்று விட்டு பின் தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.

student

தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் உடுமலை டி.எஸ்.பி தேன்மொழிவேல், மாவட்ட எஸ்பி சசாங்சாய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.அத்துடன் ஹர்த்திகாவை கொலை செய்த கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசாரின் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும் தனிப்படை போலீசார், மாணவியை கொலை செய்த காரணம் என்ன? எனவும், கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்றும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஒருவேளை பள்ளியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சம்பவம் நிகழ்ந்துள்ளதா? என்பதை அறிய அவரது பள்ளிக்கு சென்று நண்பர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் உடுமலையில் சந்தேகப்படும்படி சுற்றி வருபவர்களையும், சிறுமியின் பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே மாணவியின் கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.