புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மாணவர்கள் காலில் விழுந்த கைலாஷின் தந்தை.. கதறி, துடித்து கெஞ்சிய சோகம்.!
படியில் பயணம் :
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் அருகே வசித்து வரும் கைலாஷ் என்ற பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளான். அந்த சிறுவன் மஞ்சகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் கைலாஷ் பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
தலை நசுங்கி மரணம் :
அப்போது அவர் படியில் தொங்கிக்கொண்டு பயணம் மேற்கொண்டார். எதிர்பாராத நேரத்தில் கை தவறி பிடியை விட்ட கைலாஷ் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரத்தில் அடிபட்டு உயிரை விட்டார். தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கைலாஷ் உயிரிழந்தது சக மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விருந்தினர் மாளிகையில் விபச்சாரம்; வெளிநாட்டு பெண்களை அழைத்து வந்து ஜாலியா., ஜிம்கானா.!
விழிப்புணர்வு :
என்னதான் போலீசாரும், பெற்றோரும் இந்த மாதிரியான சம்பவம் நடக்கக்கூடாது என்று மாணவர்களை கண்டித்தாலும் அவர்கள் கேட்ட கதியில்லை. இந்த நிலையில், கடலூர் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் ஆகியோர் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
கதறிய தந்தை :
சமீபத்தில் இது குறித்து ஒரு நிகழ்ச்சி நடந்தபோது அதில் கைலாஷின் தந்தை போலீசாருடன் சேர்ந்து கலந்து கொண்டார். கைலாஷின் வகுப்பு தோழர்கள் முன்னிலையில் அவரது தந்தை பேச கூட திராணியற்று அவர்கள் முன்னால் காலில் விழுந்து, "தயவுசெய்து பார்த்து போங்கப்பா.. படியில் தொங்காதீர்கள்.." என்று கதறி கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த மாணவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: #Breaking: வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பலத்த தரைக்காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!