குடிபோதையில் தூங்கிய மணமகன்...போதை தெளிந்ததும் மணமகள் கொடுத்த அதிர்ச்சி...சோகத்தில் குடும்பத்தினர்.!

குடிபோதையில் தூங்கிய மணமகன்...போதை தெளிந்ததும் மணமகள் கொடுத்த அதிர்ச்சி...சோகத்தில் குடும்பத்தினர்.!


stopped-wedding-because-groom-drunk-in-dharmapuri

தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் மாரண்டள்ளி அருகே உள்ள தொட்டபடகாண்ட அள்ளிகிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்.கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சரவணனுக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இருவருக்கும் ஈஸ்வரன் கோவிலில் காலை 6 மணி முதல் 7.30 சுபமுகூர்த்த நேரத்திற்குள்ளாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதற்காக மணமகள் வீட்டினர் கோவிலுக்கு சென்றுள்ளன.மணமகள் வீட்டார் அங்கு சென்ற போது கோவிலில் மணமகன் வீட்டினர் யாரும் காணவில்லை.

Dharmapuri

உடனே மணமகன் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார்கள் பார்த்தப்போது சரவணன் தன்னை சுற்றி நடப்பது என்ன என்பதுகூட தெரியாத நிலையில் மது போதையில் அரை மயக்கத்தில் இருந்துள்ளார். இந்நிகழ்வை பார்த்து அதிர்ச்சியடைந்த மணபெண், எனக்கு இந்த திருமணமே வேண்டாம் என கூறி மாலையை கழற்றி வீசி எரிந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் மணமகள் வீட்டார் புகார் அளிக்க, விசாரணையில் போதை தெளிந்த சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என கண்ணீர் விட்டுள்ளார். அதற்கு போலீசார் மணபெண்ணுக்கு சம்மதம் எனில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதனையடுத்து லட்சுமியிடம், சரவணன் பேசியுள்ளார். அதற்கு லட்சுமி சரவணனை ஏற்க மறுத்ததுடன், பிடிவாதமாக மாப்பிள்ளையை வேண்டாம் என்று கூறி விட்டு அங்கிருந்து தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். பின் விரக்தியடைந்த சரவணன் சோகத்துடன் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினர்.