6 வயது மகளை மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூர தாய்.! காரணத்தை கேட்டு துடிதுடித்து போன கணவர்!! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் காதல் – உறவுகள்

6 வயது மகளை மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூர தாய்.! காரணத்தை கேட்டு துடிதுடித்து போன கணவர்!!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வருபவர் பார்த்திபன். இவருக்கு திருமணமாகி 6 வயதில் ராகவி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பார்த்திபனின் மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது மகளுடன் வசித்து வந்த பார்த்திபன் ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயான சூரியகலா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். 

 இந்நிலையில் நமக்கு வேறு குழந்தைகள் வேண்டாம்,  இருவரை மட்டும் நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என பார்த்திபன் கூறியதை சூரியகலா ஏற்றுக்கொண்டார். ஆனால் ராகவியை கவனித்துக் கொள்ளாது அவரது மகனை மற்றும் நன்றாக கவனித்து வந்துள்ளார். மேலும் ராகவியை கடுமையாக அடித்தும் துன்புறுத்தியுள்ளார். 

இந்நிலையில் அவர் நேற்று மாலை தனது கணவருக்கு போன் செய்து மகள் ராகவியை காணவில்லை என கதறி அழுதுள்ளார். அதனை தொடர்ந்து பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த பார்த்திபன் அனைத்து இடங்களிலும் மகளை தேடியுள்ளார். அப்பொழுது வீட்டின் பின்புறத்தில் புதரில் ரத்த காயத்துடன் ராகவி கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

 அதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் குழந்தை மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என யூகிக்க பட்டது. ஆனாலும் சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து சூரியகலாவிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் ஆனால் அவர் இறந்ததை எண்ணி அழுது புலம்பி நாடகமாடியுள்ளார்.

 பின்னர் தீவிர விசாரணையில் தான்  இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள ராகவி  தடையாக இருந்ததால் தான்தான் ராகவியை மாடியிலிருந்து வீசி கொன்றேன் என ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo