
தமிழக முதல்வராக ஸ்டாலின் சற்றுமுன் பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர
தமிழக முதல்வராக ஸ்டாலின் சற்றுமுன் பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைகிறது. திமுக சார்பில் 125 பேரும், 8 பேர் உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மையை நிரூபித்து ஸ்டாலின் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநரிடம் உரிமை கோரினார்.
இதனை அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பதவியேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆளுநர் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்போது. ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.
Advertisement
Advertisement