புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
‘ஸ்டாலின் தான் வாராரு’ பாடல் இசையமைப்பாளருக்கு தமிழக முதல்வர் கொடுத்த சர்ப்ரைஸ்! மகிழ்ச்சியில் இளம்ஜோடி!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சரானார். அப்பொழுது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஸ்டாலின்தான் வாராரு.. விடியல் தர போறாரு.. என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து பெருமளவில் பிரபலமானது.
ஸ்டாலின் முதல்வரானால் தமிழகத்துக்கு விடியல் பிறக்கும் என்ற விளக்கத்தில் அமைக்கப்பட்ட அந்த பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. இந்தப் பாடலுக்கு ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்தார். பாடகர் அந்தோணி தாசன் இந்தப் பாடலை பாடியிருந்தார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ்க்கு, பிரேஷி சாந்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்துள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அந்த திருமண ஜோடிக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை திருமணப் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனால் அந்த திருமண ஜோடி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.