தமிழகம் வீடியோ

கொரோனோவை விரட்ட போராடும் நல்ல உள்ளங்களுக்காக, நடிகை ஸ்ரீதிவ்யா செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

Summary:

Sridivya thank all social workers to prevent corono

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 இந்நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். மேலும் நாட்டின் நலனுக்காக தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்கள் என பலரும் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 இந்நிலையில் அவர்களுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, நேற்று மாலை 5 மணியளவில் நாட்டுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு வெளியே நின்று கைகளை தட்டி அவர்களை கௌரவித்தனர். 

இந்நிலையில் கொரோனோவை  விரட்ட உயிரையே பணயம் வைத்து போராடும் நல்ல உள்ளங்களுக்காக நன்றி கூறும் வகையில் நடிகை ஸ்ரீதிவ்யா,  வித்தியாசமாக பாத்திரத்தின் மீது அடித்து சத்தம் எழுப்பி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement