தமிழகம்

மட்டன் விரும்பிகளே உஷாரா இருங்க.! சென்னை நாய்கறியை தொடர்ந்து புதிதாக வெடித்த கறி பிரச்சினை, அதுவும் எங்கே தெரியுமா?

Summary:

spoiled meat used in madurai shop

மதுரை திருமங்கலத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கெட்டுப்போன 500 கிலோ ஆட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சமீபத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டு அது நாய்க்கறியாக இருக்கலாம் என கூறப்பட்டது. மேலும் ஆடு ஆட்டுக்கறிதான் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் பலர் குற்றசாட்டு வைத்தனர்.இந்த நிலையில் அதுகுறித்து விசாரிக்க அதிகாரிகள் ஜோத்பூர் விரைந்துள்ளனர். 

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி விற்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கிருந்த பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர் . இதில் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி சுகாதாரத்துறை அதிகாரிகளால  பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் கெட்டுப்போன ஆட்டுகறியின் மீது  பினாயில் ஊற்றி அதிகாரிகள் மண்ணில் புதைத்தனர். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement