எம்.ஜி.ஆர் உருவம் பதித்த புது நாணயம்! சற்றுமுன் வெளியிட்டார் தமிழக முதல்வர்!Special coin released for MGR 102 birthday

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் MGR இன் 102 வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறித்து. இந்நிலையில் MGR இன் உருவம் பதித்த புது நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடும் விதமாக அதற்கான ஏற்பாடுகள் டாக்டர் MGR மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. வளாகத்தில் உள்ள MGR இன் சிலைக்கு தமிழக முதலவர் மற்றும் துணை முதல்வர் இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

MGR

மேலும், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை, முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சரோஜா, கருப்பண்ணன், சம்பத், மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னதாக, MGR உருவம் பொதித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் 
அந்த நாணயங்களை வெளியிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.