கொரோனா நிவாரண நிதியுதவி அளித்த நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா! அதுவும் எவ்வளவு தொகை பார்த்தீர்களா!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமெடுத்து வரும் நிலையில் தமிழக


sowndarya-rajinikanth-donate-1-crores-for-corono-relief

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமெடுத்து வரும் நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து படுக்கை பற்றாக்குறை,ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது  தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளவர்கள் தாராளமாக நிதியுதவி செய்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் மற்றும் மாமனார் வணங்காமுடியுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனோ நிவாரண நிதிக்காக தங்களது அபெக்ஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ 1கோடி  நிதியுதவி செய்துள்ளார்.