50 ரூபா போதும்பா.. மூதாட்டியின் நெகிழ்ச்சி செயல்., வைரலாகும் காணொளி.!

50 ரூபா போதும்பா.. மூதாட்டியின் நெகிழ்ச்சி செயல்., வைரலாகும் காணொளி.!


South Tamilnadu Grand Ma Salary Work

தென்மாவட்டத்தை சார்ந்த மூதாட்டி ஒருவர், தோட்ட வேலைகளுக்காக சென்று 5 மணிநேரம் பணியாற்றியுள்ளார். பணியாற்றும் நேரத்தில் தோட்டத்தில் இருந்த கீரைகளையும் பறித்து விற்பனை செய்ய வைத்துள்ளார். 

வேலைகள் முடிந்ததும் தோட்டத்தின் உரிமையாளர் மூதாட்டிக்கு ரூ.100 கூலிகொடுத்த நிலையில், எனக்கு ரூ.50 போதும் என்று மூதாட்டி கூறுகிறார். 5 மணிநேரம் வேலை பார்த்தால் ரூ.300 கூலி வாங்கி செல்கிறார்கள், நீங்கள் ரூ.100 வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று பலகட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

tirunelveli

இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, இறுதியாக இங்கு பிரித்த கீரையை விற்பனை செய்தால் ரூ.200 கிடைக்கும் என மூதாட்டி கூற, இதனை நீங்கள் நினைத்தால் ரூ.1000-க்கு விற்பனை செய்யலாம் என்று உரிமையாளர் கூறுகிறார். 

இதனைக்கேட்ட மூதாட்டியோ அவ்வுளவு பணம் வேண்டாம். எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வான். எனக்கானது கிடைத்தால் போதும், நீங்கள் ரூ.50 மட்டும் தாருங்கள் என்று கூறி பெற்று செல்கிறார். நீங்கள் எனது தாய் போல சடைக்காமல் (சலிக்காமல் - தென்மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள பேச்சுவழக்கு) வைத்துக்கொள்ளுங்கள் என கூறியும், ரூ.50 பணம் வாங்கி கொண்டு கீரைகளை எடுத்துக்கொண்டு மூதாட்டி செல்கிறார். 

இந்த வீடியோ எங்கு? யாரால்? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லையென்றாலும், வீடியோ வைரலாகி வருகிறது.