பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
தாய்க்கு இருந்து வந்த தகாத உறவு! மகனும், மருமகனும் சேர்ந்து செய்த செயல்! அலறல் சத்தம்போட்ட அக்கம்பக்கத்தினர்!

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் முருகன். லாரி டிரைவரான இவர் நேற்று மாலை அவரது குடியிருப்பின் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த ஆரோக்கியமேரிக்கும் அதே குடியிருப்பில் வசித்துவந்த முருகன் என்பவருடன் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், முருகன் வீட்டுக்கு வந்த போது அவரை ஆரோக்கிய மேரியின் மகன் நரேஷ், மருமகன் மரியதாஸ் ஆகியோர் முருகனை அரிவாளால் வெட்டிகொலை செய்துள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் போட்டுள்ளனர். இதனையடுத்து இருவரும் தப்பி ஓடியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் இருவரையும் விரட்டி சென்ற பொழுது கருணாகரன் என்ற சப்-இன்ஸ்பெக்டரை வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார் நரேஷ். அதையும் மீறி போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் நரேஷ்.
இதனையடுத்து இதனையடுத்து காயமடைந்த நரேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய மரியதாஸை போலீசார் தேடி வருகின்றனர்.