காதலுக்கு எதிர்ப்பு! மகனுக்கு பயந்து சாலையில் ஓடிய தாய்க்கு துடிதுடிக்க நேர்ந்த கொடூரம்!



son-killed-mother-to-not-accept-his-love

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வந்தவர் கலைவாணி. இவரது கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். இவருக்கு விக்ரம் என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். கலைவாணி  தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து வந்து பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் விக்ரமிற்கு திடீரென குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கும் அவரது மகனுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

அதுமட்டுமின்றி விக்ரம் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கும், கலைவாணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிய வந்தநிலையில் விக்ரம் அவரது தாய்  கலைவாணியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அவரை அடித்து தாக்கியுள்ளார். இதனால் பயந்து கலைவாணி வீட்டைவிட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் ஓடியுள்ளார். அவரை துரத்திக்கொண்டு  விக்ரமும் பின்னே ஓடியுள்ளார்.

Love

அப்பொழுது அங்கு கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்நிலையில் விக்ரம் கலைவாணியை  பிடித்து தள்ளியுள்ளார்.அதில் கலைவாணி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  கலைவாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது மகன் விக்ரமையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.