தாயின் கண் முன்னே கதற கதற மகனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!Son killed infront of mother in thiruvallur

திருவள்ளூர் அருகே தாயின் கண் முன்னே மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் 20 வயதான விஜயகாந்த். இவர் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Murder

இந்த சம்பவம் விஜயகாந்தின் தாய் சத்யா கண் முன்னே அரங்கேறியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் விஜயகாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே மகனைக் காப்பாற்ற முயன்ற சத்யாவுக்கும் உடலில் வெட்டு விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருவேற்காடு போலீசார் விஜயகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடைய இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.