எப்போ பார்த்தாலும் மகளுடன் தகராறு.! மருமகனை தட்டிக்கேட்ட தந்தைக்கு துடிதுடிக்க நேர்ந்த பரிதாபம்! அதிர்ச்சி சம்பவம்.!

எப்போ பார்த்தாலும் மகளுடன் தகராறு.! மருமகனை தட்டிக்கேட்ட தந்தைக்கு துடிதுடிக்க நேர்ந்த பரிதாபம்! அதிர்ச்சி சம்பவம்.!


son-in-law-killed-father-in-law-at-sengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் துலுக்கானம். 60 வயது நிறைந்த இவர் விவசாயம் செய்து வருகிறார். அவரது மனைவி சம்பூரணம். துலுக்கானத்தின் இரண்டாவது மகள் ஜெயந்தி அதே பகுதியில் வசித்து வந்த டார்ஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் டார்ஜன் மற்றும் அவரது மனைவி ஜெயந்திக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருமாம்.

அண்மையிலும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயந்தியின் தாய் மற்றும் தந்தை இருவரும் மருமகன் டார்ஜனிடம் மகளுடன் தகராறு செய்வது குறித்து தட்டி கேட்டுள்ளனர். அப்பொழுது ஆத்திரமடைந்த டார்ஜன் மாமனார் மற்றும் மாமியாரை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

killed

இதில் துலுக்கானத்திற்கு பயங்கர அடி ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துலுக்கானத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சம்பூரணத்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பியோடி தலைமறைவாகவுள்ள டார்ஜனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.