தமிழகம்

தந்தை தேர்தலில் வெற்றி! சந்தோஷத்தில் துள்ளிகுதித்த மகன்! அடுத்தகணமே கதறவைத்து நேர்ந்த பெரும் துயரம்!

Summary:

son dead at next second while father won in election

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊகாயனூரில் 5-வது வார்டு வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டவர்  பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம். இந்நிலையில் இந்த வாக்குகள் எண்ணிக்கை ஏஞ்சல் என்ஜினியரிங் காலேஜில் நடைபெற்றது.

இந்நிலையில சுப்பிரமணியம் வாக்குச்சாவடியில் நின்றுகொண்டு முடிவிற்காக காத்துகொண்டு இருந்துள்ளார். மேலும் தனது தந்தை ஜெயிக்க வேண்டும் என அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வந்த அவரது மகன் கார்த்திக் கல்லூரியின் வெளியில் நண்பர்களுடன் நின்று கொண்டு தேர்தல் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தந்தை சுப்பிரமணியன் 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை கேட்ட கார்த்தி சந்தோசத்தில் துள்ளிக் குதித்துள்ளார்.அப்பொழுது கார்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement