1லட்சம் சம்பளம் வாங்கியும் சேமிக்கவும் முடியவில்லை, நிம்மதியாகவும் வாழமுடியவில்லை! ஐடி கம்பெனி ஊழியர் எடுத்த அதிரடி முடிவு!

1லட்சம் சம்பளம் வாங்கியும் சேமிக்கவும் முடியவில்லை, நிம்மதியாகவும் வாழமுடியவில்லை! ஐடி கம்பெனி ஊழியர் எடுத்த அதிரடி முடிவு!



software-company-staaf-new-decision

 

தற்போதைய வாழ்க்கை முறையில், நகர வாழ்க்கை என்பது சுகாதாரமற்ற வாழ்க்கையாக மாறிவிட்டது. படித்த இளைஞர்கள் பெரும்பாலானோர் பட்டினத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

 தொழில்நுட்ப துறையில் உள்ள பெரும்பாலானோர் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகரங்களில் என்னதான் லட்ச லட்சமாக பணம் சம்பாதித்தாலும், சொந்த ஊரில் கிடைக்கும் நிம்மதி கிடைப்பதில்லை. 

 சொந்த ஊரில் தனது குடும்பங்களை பிரிந்து சொந்த ஊரில் தனது குடும்பங்களை பிரிந்து,  உறவினர்களை பிரிந்து தனியாக வாழும் வாழ்க்கை மிகவும் கொடூரமான வாழ்க்கையாகும். கிராமங்களில் குறைவாக சம்பாதித்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அதாவது தூய்மையான காற்று தூய்மையான நீர், நிம்மதியான வாழ்க்கை, நிம்மதியான தூக்கம் என வாழ முடிகிறது என்பதை உணர்ந்த, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சூசைராஜ் என்பவர் புதிய முயற்சியை எடுத்துள்ளார்.

IT employee

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை தனியார் ஐடி கம்பெனியில் வேலைபார்த்துவந்துள்ளார். கிராமத்தில் பிறந்த இவர் சென்னையில் அதிக அளவில் சம்பளம் வாங்கினாலும், நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். இதனால் தனது சொந்த ஊரிலேயே தொழில் தொடங்க முடிவெடுத்துள்ளார்.

அவர் தேர்ந்தெடுத்த தொழிலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்து, பழங்கள் விற்பனைக்கூடம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கும் சொந்த ஊரில் சுகாதாரமான வாழக்கை வாழவே ஆசை. அதனால் தான் சொந்த ஊரில் கடை வைக்க நினைத்தேன். நான் சென்னையில் 1லட்சம் சம்பளம் வாங்கினாலும், மாத கடைசியில் கையில் பணம் இல்லாமல் தான் இருக்கிறது. ஆனால் சொந்த ஊரில் எனக்கு 20000 ரூபாய் வருமானம் கிடைத்தால் அதிலே 10000 முதல் 15000 வரை சேமிக்க முடியும். இதனால் தான் இந்த முடிவு எடுத்தேன் என கூறினார்.  இவரது செயலை பலரும் பாராட்டி உள்ளனர்.