தமிழகம்

கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம் முன்னிலையில் மம்தா பேனர்ஜிக்கும், சோசலிசத்திற்கும் திருமணம்.! சேலத்தில் சுவாரஸ்யம்.!

Summary:

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த காட்டூர் பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்குட்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த காட்டூர் பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்குட்பட்டு தம்பதியினருக்கு எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் இவர்களது திருமண அழைப்பிதழ் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்தது. 

அவர்களது திருமண அழைப்பிதழில் மணமகன் சோசலிசம் மணமகள் மம்தா பானர்ஜியை ஜூன் 13 அன்று திருமணம் செய்து கொள்ளபோகிறார். முன்னாள் சகோதரர்களான கம்யூனிசம் மற்றும் லெனினிசம் முன்னிலையில். குடும்பத்தின் பேரனான மார்க்சிசமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


பனமரத்துப்பட்டி ஒன்றிய கவுன்சிலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளருமான மோகன் கட்சிக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் தங்கள் மகன்களுக்கு கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம், சோசலிசம் என்று வித்தியாசமாக கொள்கை ரீதியான பெயர்களை வைத்துள்ளார்.

இவரது உறவினர் குடும்பத்தில் பிறந்த முறைப்பெண் மம்தா பேனர்ஜியை பெற்றோர் சம்மதத்துடன் இன்று கரம்பிடித்துள்ளார் சோசிலிசம். மேற்கு வங்காத்தில் கம்யூனிசத்தைக் கடுமையாக விமர்சித்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக களமாடுகிறார் அந்த மம்தா பானர்ஜி. ஆனால் சேலத்திலோ தீவிர கம்யூனிஸ்ட் குடும்பமான மோகனின் குடும்பத்தில் ஐக்கியமாக உள்ளார் இந்த மம்தா பானர்ஜி. இந்தநிலையில் இந்த இளம்ஜோடிக்கு பலதரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement