இப்படியொரு சமத்து பிள்ளையா.! அப்பாவின் சாலையோர ஹோட்டலில் குட்டி சிறுவன் செய்த காரியத்தை பார்த்தீங்களா! நெகிழ்ச்சி வீடியோ!!

இப்படியொரு சமத்து பிள்ளையா.! அப்பாவின் சாலையோர ஹோட்டலில் குட்டி சிறுவன் செய்த காரியத்தை பார்த்தீங்களா! நெகிழ்ச்சி வீடியோ!!


Small boy studying in father roadside shop

தனது தந்தை நடத்தும் சாலையோர கையேந்தி பவன் உணவகத்தின் அருகே அமர்ந்து சிறுவன் ஒருவன் ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக இணையத்தளங்களில் சிறு குழந்தைகளின் சேட்டைகள், ஆச்சரியப்படவைக்கும் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வைக்கும் வகையில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் பல வீடியோக்கள் பார்ப்போரை உற்சாகப்படுத்தி நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 

அந்த வகையில் தற்போது சிறுவன் ஒருவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அந்த சிறுவனின் தந்தை கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் கையேந்தி பவன் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு அவர் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு பக்கம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் போடும் சத்தம் மற்றும் மற்றொரு புறம் சாலைகளில் செல்லும் வாகனத்தின் இரைச்சல் என அவற்றிற்கிடையே அமர்ந்து அந்த சிறுவன் கையில் புத்தகத்தை வைத்துகொண்டு மிகவும் ஆர்வமாக படித்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் பலரும் அந்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.