பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
தமிழகமே தலைவணங்கும்படி,நெல் ஜெயராமனுக்காக ரியல் ஹீரோ சிவகார்த்திகேயன் செய்த நெகிழவைக்கும் செயல்.!

இயற்கை வேளாண் விஞ்ஞானியின் மாணவரும், 174 பாரம்பரிய நெல் வகைகளை அழிவிலிருத்து காத்தவருமான நெல் ஜெயராமன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நெல் ஜெயராமனை பல அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள்,நடிகர்கள் என பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று காலை காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மேலும் ஜெயராமனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திருவாரூர், கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடைப்பெற உள்ளது.
இந்நிலையில் நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவு மற்றும் முழு இறுதிச்சடங்கிற்கான செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் ஏற்கனவே நெல் ஜெயராமனின் சிகிச்சைக்காக செலவு செய்த சிவகார்த்திகேயன், அவரது மகனின் படிப்பு செலவையும் ஏற்று கொண்டது குறிப்பிடதக்கது.