வீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி! சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்!

வீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி! சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்!


Sister and brother dead while playing in bond

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பொன்குடிக்காடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர்  குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு பிருந்தா என்ற 10 வயது மகளும், கிரிதரன் என்ற 8வயது மகனும் உள்ளனர். ஊரடங்கால் பள்ளிகள் இல்லாத நிலையில் நேற்று மாலை அக்கா,  தம்பி இருவரும் வீட்டின் அருகேயுள்ள கோயில் திடலில்  விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

பின்னர் பிருந்தா தனது தம்பியை அருகில் இருந்த குளத்திற்கு அழைத்துச்சென்று  குளித்துள்ளார். அப்பொழுது அங்கு ஆழமாக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் திடீரென வழுக்கி விழுந்து கிரிதரன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனைக்கண்ட பிருந்தா உடனே தம்பியை காப்பாற்ற முயன்று அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

Play

இந்த நிலையில் அவ்வழியே அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவர் இதனைக் கண்டு, பேருந்தை  ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிச்சென்று அவர்களுக்கு உதவியுள்ளார். பின்னர் அவர் கூச்சலிட்ட நிலையில் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு ஓடியுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளித்து, மருத்துவர்கள் நீண்ட நேரமாக போராடியும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் ஒரே நேரத்தில் அக்கா தம்பி இருவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.