எஸ்.ஐ.வில்சன் கொலையில் திடீர் திருப்பம்! கேரள போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

எஸ்.ஐ.வில்சன் கொலையில் திடீர் திருப்பம்! கேரள போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


si wilson murder issue

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் வில்சனை சுட்டு மற்றும் கத்தியால் குத்திக் படுகொலை செய்தனர்.

எஸ்.ஐ. வில்சனை அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன்  கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ள நிலையில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தவுபீக், ஷமீம் என்ற இளைஞர்களைக் கைது செய்தனர். 

si wilson

இவர்கள் இருவரும் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்று விட்டு, அருகில் இருந்த மசூதி வழியாக தப்பிச் சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. மேலும், அவர்கள் இருவரும் எஸ்ஐ வில்சனை எதிர்பாராத விதமாக கொல்லவில்லை என்றும், வில்சனைக் கொலைச் செய்வதற்காக இரண்டு தினங்கள் தனியே திட்டம் தீட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.