BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் தொல்லை; போக்சோவில் இளைஞர் கைது..!
காரைக்காலில் சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.
காரைக்கால், அடுத்த தமிழகத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காரைக்கால் நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி, வீட்டின் எதிரே தனியாக அமர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் (23), ஆற்றில் பிடித்த உயிருள்ள நண்டை சிறுமியின் தொடையில் விட்டுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி அலறி துடித்தார். அப்போது சிறுமியின்கைகளை பிடித்து மைக்கேல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மைக்கேலின் செயலை பார்த்து ஆத்திரம் அடைந்தனர்.
அவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதன் பிறகு மைக்கேலை காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் உறவினர்கள் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.