ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல், இன்று வரை ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வரும் சேவாபாரதி இளைஞர்கள்!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல், இன்று வரை ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வரும் சேவாபாரதி இளைஞர்கள்!



sevabarathi-youngsters-help-to-poor-people

சீனாவில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

 உலகின் பல நாடுகளை உலுக்கிய கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இந்த கொடூர வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Sevabarathi

 தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பல ஏழை எளிய மக்கள் உணவிற்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சுகாதாரத்துறையினர் மட்டுமின்றி, தன்னார்வலர்களும் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருபவர்களுக்கும், ஆலங்குடி காவல் துறை நண்பர்கள், வடமாநில நண்பர்கள், பேரூராட்சி துய்மை பணியாளர்கள், கிராம ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் சேவா பாரதி சார்பாக
உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

சேவா பாரதி இளைஞர்கள், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியதில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த சேவையை செய்து வருகின்றனர். மேலும், கொரோனா அச்சத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் ஏழை மக்களுக்கு இவர்கள் செய்யும் சேவைபெரிய உதவியாய் இருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.