அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பரபரப்பு..ஸ்கூட்டியில் சென்ற தாய், மகள் பைக் மோதி படுகாயம்.!
புவனகிரி அருகே தெற்கு திட்டை ரோட்டு தெருவில் பரசுராமன் தனது மனைவி அருணா மற்றும் மகள் விசாலியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து சந்தைக்கு செல்வதற்காக அருணா மற்றும் விசாலி ஸ்கூட்டியில் புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து மணவெளி பகுதி அருகே ஸ்கூட்டியை வலது பக்கம் திருப்பிய போது புவனகிரியில் இருந்து குறிஞ்சிப்பாடி சாலை வழியாக பைக்கில் வேகமாக வந்தவர் ஸ்கூட்டியில் மோதியுள்ளார்.
இதனால் ஸ்கூட்டியில் வந்த தாய், மகள் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தார்கள். இந்த விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் அருணா மற்றும் விசாலிக்கு முதலுதவி செய்யப்பட்டது.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து அருணா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் புவனகிரி போலீசார் பைக் ஓட்டி வந்த மேலமணக்குடி செல்வக்குமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.