மாற்றுத்திறனாளியிடம் ரூ.45 இலட்சம் பண மோசடி விவகாரத்தில் காட்டம்... லீக்கான நா.த.க சீமான் ஆடியோ வைரல்.!



Seeman Audio Leaked about Anbu Tennarasu Forgery Issue

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு. இவர் வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கி தருகிறேன் என மாற்றுத்திறனாளி ஒருவரிடம் ரூ.45 இலட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் எழுந்தது.

இந்த விஷயம் தொடர்பாக கட்சியை சேர்ந்த ஒருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு சீமான் அளித்துள்ள பதில் தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த ஆடியோ 51 நொடிகள் மட்டும் வெட்டி வெளியிடப்பட்டுள்ளது.

சீமான்: ம்ம்

கட்சிக்காரர்: அண்ணே நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன்.

சீமான்: சரிங்க..

கட்சிக்காரர்: அண்ணே அம்பத்தூர் தொகுதியில்இருந்து நண்பர் அழைத்திருந்தார். மாதவரம் பிரச்சனை தொடர்பாக பேசியிருந்தார்.

seeman

சீமான்: சரி...

கட்சிக்காரர்: அந்த பிரச்சனை தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?..

சீமான்: இப்போது என்ன சொல்ல வருகிறாய்? என்ன விஷயம்..

கட்சிக்காரர்: இல்லை அண்ணே.. அன்பு தென்னரசு விஷயம் தொடர்பாக..

சீமான்: இல்லப்பா.. நீ விடுப்பா.. நீ ஏன் இதற்குள் வருகிறாய்?.

கட்சிக்காரர்: நான் கேட்டேன் அண்ணா..

சீமான்: உன் வேலை என்ன? இதை எதற்கு அந்த நாயி உன்னிடம் கூறுகிறான்.. போஸ்டர் அடித்து ஒட்டட்டுமா?.. போஸ்டர் அடித்து ஒட்டேன். உன் வேலையை பாருப்பா. எனக்கு தெரியாதா என்ன செய்ய வேண்டும் என...

கட்சிக்காரர்: சரிண்ணே..