ஆளும் அரசை யாரும் இவ்வளவு மோசமாக விமர்சிக்க முடியாது; சர்க்கார் படத்திற்கு ஆதரவாக பொங்கிய சீமான்!

ஆளும் அரசை யாரும் இவ்வளவு மோசமாக விமர்சிக்க முடியாது; சர்க்கார் படத்திற்கு ஆதரவாக பொங்கிய சீமான்!



seemam-supports-sarkar

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்தது. அவை அனைத்தையும் உடைத்தெறிந்து தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனைப் படைத்து வரும் சர்க்கார் படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறது ஆளும் அதிமுக அரசு. 

இதற்கு காரணம் படத்தில் பல இடங்களில் ஆளும் அதிமுக கட்சியை தாக்கி இழிவாக பேசுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது தான். மற்றும் படத்தில் வில்லியாக வரும் வரலட்சுமியின் பெயர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்று வைத்தள்ளனர். இது படத்தின் வில்லியாக ஜெயலலிதாவை சித்தரிப்பது போன்று உள்ளதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Seeman supports sarkar

குறிப்பாக இந்த படத்தில் தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது அரசின் திட்டங்களை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி படத்திற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக அமைச்சர்கள் கூறியள்ளனர். 

இந்நிலையில் அரசின் இத்தகைய நடவடிக்கையைக் குறித்து கருத்து தெறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், "மக்கள் இலவசப் பொருட்களுக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளிய இந்த அரசு வெட்கப்பட வேண்டும். அதனை எடுத்து கூறினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது. அப்படி வெட்கமாக இருந்தால் விசம் குடித்து செத்துப்போங்கள்" என்று பேசியுள்ளார்.